
என் கவிதைகளில்
பேசமுடியாத
வேதனை
உன்னிடமேயிருந்திருக்கிறது
சில பொழுதுகளில்
வாளின் கூர்முனைகளை
வென்று
வலிக்கிறது
உன் மௌனம்...
ஒரு மின்விசிறியின்
முதுகைப்போல்
நீ
உதிரவிடும்
வார்த்தைகளில்
பின்னப்பட்டிருக்கும்
வெறுமை
என்
கனவுகளை சிறையெடுக்கும்.
எனக்காய்
நீ
உதிரவிடும்
புன்னகையின் போதாயிருக்கலாம்
சிறைமீட்பு
த.அகிலன்
1 comment:
நல்லா இருக்கு அகிலன். படங்களும் சூப்பரா தேர்ந்தெடுக்கிறீங்க.
Post a Comment