Sunday, October 08, 2006

மரண தண்டனையும் மண்ணாங்கட்டியும்

என் அன்னலச்சுமி போனதுக்கப்பறம் எனக்கு வாழ்க்கையில பிடிப்பில்லாமபோச்சு ஆனா மரணதண்டனையை விலக்கினாங்கண்ணா நான் நல்ல மனுசனா வாழமுயற்சி செய்வேன்…

அட இது என்னுதில்லீங்க விருமாண்டியோடது.

ஏன் நான் இதை சொல்றேன்னா தமிழ்மணத்தில நானும் பார்க்கிறேன் கொஞ்சநாளா எல்லோரும் மரணதண்டனை மரணதண்டனை எண்டு ஒரே மரணதண்டணை மயமாப்போச்சு நானும் என் பங்குக்கு எதையாவது போட்டுத்தாக்க வேண்டாமா அதான் கோதாவுல இறங்கிட்டேன்.

கமல்ஹாசன் தனது விருமாண்டி படம் மரணதண்டனைக்கு எதிரானது என்று சொன்னாலும் அந்தப்படம் எந்தளவுக்கு மரணதண்டனைக்கு எதிராக பாதிப்பை ஏற்படுத்தியது என்பது கேள்விக்குரியதே என்னைக்கேட்டால் அந்த மரணதண்டனை குறித்த சமாசாரங்களை விட்டுப்பார்த்தால் விருமாண்டி நல்லபடம்.



எத்தினை சினிமா பாத்திருப்போம் நீதிபதி தன் சுத்தியால டமார் டமார் எண்டு அடித்து இ.பி.கோ 302வது சட்டப்படி மரணதண்டனை அழித்து தீர்பளிக்கிறேன் என்பார்.

மரணதண்டனை தேவையா இல்லையா? எவ்வளவு பெரிய கேள்வி இது. மரணதண்டனை யாருக்கு கொடுக்கப்படுகிறது. பெரிய பெரிய கிரிமினல்களுக்கு கொடுக்கப்படுகிறது கொலை கொள்ளை இப்படி இனிமே அவனை திருத்தவே முடியாது இவனை விட்டு வைச்சா மத்தவங்களுக்கு ரொம்ப கெடுதல் எண்டு நீதிதேவதை நினைச்சா உடனே மரண தண்டனை வழங்கப்படகிறது.
(ம் அவ கண்ணை வேற கட்டி வைச்சிட்டு கை நீட்டி லஞ்சம் வாங்கி இந்த நீதிபதிகள் நிரபராதிகளுக்கு மரணதண்டனை வழங்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்).

அட என்னைக்கேட்டா நான் சொல்லுவன் மரணதண்டனை தேவையில்லலை என்று. தூக்குப்போட்டா ஒருத்தன் எப்பிடி செத்துப்போவான் தெரியுமா கழுத்து எலும்புகள் கழண்டுதான் செத்துப்போவான். அட நம்ப உடம்பு அவ்வளவு லேசில எங்களை சாக விடாது முதல் தரம் எலும்பு கழர கழுத்து தன்பாட்டுக்கு அதை பூட்டும் மூண்டாந்தரம் எக்கி எக்கிப்பாத்து அது முடியாம செத்துப்போவான் இந்த மரணத்திற்கிடையில் எவ்வளவு அவஸ்தை தெரியுமா?(வலியே தெரியாம சாகிறதுக்கு நிறைய எங்கட விஞ்ஞானிகள் கண்டு பிடிச்சிட்டாங்கள் தான். இருந்தாலும்)

அட அவன் எவ்வளவு பெரிய தப்பும் பண்ணியிருக்கட்டும் அதுக்காக அவனை கொல்லுறதா அப்பிடி நீங்க கொண்டா அவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கமுடியம். வன்முறைக்கு வன்முறைதான் தீர்வுண்ணு உலகம் சொல்கிறது என்றால் அமைதிக்கான நோபல் பரிசை அணுகுண்டு செய்ய பயன்படுத்துங்கள். கத்திக்கு கத்தி குத்துக்கு குத்து என்பதெல்லாம் தப்பு என்பது தான் என்கருத்து.

சாதாரணமா ஊருக்குள் கொலை செய்யிறவனை பிடிச்சி மரணதண்டனை வழங்குகிறீர்கள் அட அமெரிக்க கழுகு புஸ்சுக்கு யார் மரணதண்டனை கொடுப்பது எத்தனை கொலைசெய்கிறார்.பயங்கரவாதத்தை தடுப்பது என்று சொல்லி செய்யாத பயங்கரவாதம் எல்லாம் செய்கிறார். ஏன் அண்மையில் இலங்கை முல்லைத்தீவில் 52 குழந்தைகளை குண்டு போட்டு கொன்றாரோ மகிந்த ராஜபக்ச அவருக்கெல்லாம் மரதண்டனை குடுப்பீங்களா? இப்பிடி பெரிய பெரிய கொலைகாரங்களையெல்லாம் சாதாரணமா சீச்சி ராஜமரியாதையோடு நடமாட விட்டு விட்டு உள்ளுர்கொலைகாரன் நாக்கை தொங்கப்போட்டுக்கிட்டு தூக்கில தொங்கணுமா? சும்மா போங்கய்யா மரணதண்டனை வேணும் என்று கத்தாம…..

5 comments:

- யெஸ்.பாலபாரதி said...

அய்யோ தம்பி.. என்னப்பா இப்படி ஒரு பதிவு போட்டு இருக்க..,
நம்ப ஆளுங்க எல்லாம் சும்மா ஹிட் கவுட்டர் கூட்டுறதுக்காக பதிவு போடுறாங்க(என்னைய மாதிரி..), அதையெல்லாம் பெரிசா எடுத்துக்க கூடாது.
நம்மிள் பலர் வாய்ச் சொல்லில் வீரர்களாகத்தான் இருக்கிறோம்.
களத்தில் இறங்குவது கிடையாது.
இங்கே 2000 இசுலாமியனைக்கொன்றவனுக்கு முதல்வர் பதவியும், செத்த இசுலாமியக்களுக்கு ஈடாக ஒரு இசுலாமியனை ஜனாதிபதியாக்குவதும் இங்கு தான் நடக்கிறது.
வியாதியால் தமிழக மக்கள் மாண்டு வருவது இவர்களுக்கு தெரியாது..
சரி விடு.. பொல்லாப்பு வந்து சேரும்.
முல்லைத்தீவு மட்டுமல்ல ஈழத்தமிழர் என்று குறிப்பிட பயந்து தான் இன்னும் பலர் 'இலங்கை தமிழர்' என்று சொல்லி வருகிறார்கள்.
ஹிட் எகிருவதற்கான வழியைப்பாருவே!

த.அகிலன் said...

//ஹிட் எகிருவதற்கான வழியைப்பாருவே!//

சொல்லித்தந்நதா பிழைச்சுக்குவன் இல்ல இந்த தம்பி
அன்புடன்
த.அகிலன்

We The People said...

//இங்கே 2000 இசுலாமியனைக்கொன்றவனுக்கு முதல்வர் பதவியும், செத்த இசுலாமியக்களுக்கு ஈடாக ஒரு இசுலாமியனை ஜனாதிபதியாக்குவதும் இங்கு தான் நடக்கிறது.//

ஏல பெருசு பாலா பாய் எனக்கு புரியுது ஓய் உம்ம மேட்டர். இதெல்லாம் கவுண்ட் பண்ணறது தான் உம்ம வேலையா?? என்ன நடக்குதுன்னு தெரியாமல் சும்மா வீம்புக்கு பேசாதீங்க பாலா.

//நம்ப ஆளுங்க எல்லாம் சும்மா ஹிட் கவுட்டர் கூட்டுறதுக்காக பதிவு போடுறாங்க(என்னைய மாதிரி..)// இதற்க்காக பாலாவை வண்மையா கண்டிக்கிறேன். நீங்க ஹிட் கவுண்டுக்கு எழுதறீங்கன்னா? மத்தவங்களும் அதுக்காக எழுதுறாங்கன்னு எப்படி முடிவு பண்ணலாம்.

த.அகிலன் said...

வந்ததுதான் வந்தீங்க வீ த பீப்பிள் ஏதாவது என் பதிவைப்பற்றி இரண்டு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல இந்த தம்பி சந்தோசப்பட்டிருப்பான்...
அன்புடன்
த.அகிலன்

த.அகிலன் said...

ம் வாங்க அனானியாரே எதுக்கு என்னை அதை பாக்கச் சொல்றீங்க பாலபாரதியின் மறுமொழியைப்பார்ததீர்கள்தானே
அன்புடன்
த.அகிலன்