Tuesday, October 24, 2006

மூழ்கும் கப்பல்கள்....


பெருமாள் கோவில்
சிற்பங்களைக் கழுவிக்
கொண்டிருக்கிறது மழை

நிர்வாணப்பெண்கள்
மறுபடியும் நனைய
மரங்களினிடையே
மறையும் கண்ணன்.

என்
காலகளினடியில் மறுபடியும்
நழுவி ஓடிக்கொண்டிருக்கிறது
பூமி

நீரின் மீது
முடிவிலிக்கோடுகளை
ஒற்றைப்புள்ளியில் இருந்து
வரைந்து கொண்டிருக்கிறது
இலையிருந்து நழுவும்
ஒற்றைத் துளி.

குழந்தைகள்
கொப்பிகளைக்கிழிக்கின்றன

எனக்குள்
மிதக்கத்தொடங்கின கப்பல்கள்

இப்போது
நீரினிலாகிறது
குழந்தைகளின் உலகு
யாரேனும் அதை
மறுக்கையில்

மழை
இடம்பெயர்கிறது
குழந்தைகளின்
கண்களிற்குள்..

எனக்குள்
மூழ்கத் தொடங்கின
கப்பல்கள்...

த.அகிலன்

3 comments:

Anonymous said...

கவிதை நன்றாக உள்ளது.

//குழந்தைகள்
கொப்பிகளைக்கிழிக்கின்றன

எனக்குள்
மிதக்கத்தொடங்கின கப்பல்கள்//

வரிகள் நன்றாக வந்தமைந்திருக்கின்றன.

//இப்போது
நீரினிலாகிறது
குழந்தைகளின் உலகு
யாரேனும் அதை
மறுக்கையில்

மழை
இடம்பெயர்கிறது
குழந்தைகளின்
கண்களிற்குள்..//

இந்த வரிகளும் அவ்வாறே உள்ளன.பாராட்டுக்கள்.

Anonymous said...

nandru.....

த.அகிலன் said...

நன்றி பஹீமா அக்கா என் ஒவ்வொரு கவிதைக்கும் மறுமொழி இட்டு உற்சாகப்படுத்து வதற்கு
அன்புடன்
த.அகிலன்