Saturday, September 30, 2006

மீறல்


நிழலுருவில் வசந்தம்
நிஜம்
ஒளியின் எத்தொலைவிலோ

ஒளியின் தொலைவை
விரட்டும் என்காலம்
வழிநெடுக
இருளின் கரங்கள்
என் விழிமறைக்கும்

என்வயசையும்மீறி
மனம் கொதிக்கும்
அதன்தகிப்பில்
என் கரம் எரித்து
ஒளி படைத்தேன்

உயிர் உருக்கி
வழி கடந்தேன்
வலியையும்...

இருள்சொன்னது
நீ வயசுக்கு மீறியவன்
நான் சொன்னேன்
இன்னும் இருக்கிறார்கள்
வயசுக்கு மீறியவர்கள்..

த.அகிலன்

3 comments:

மஞ்சூர் ராசா said...

ஆம் இன்னும் இருக்கிறார்கள் வயசுக்கு மீறியவர்கள்

பேனாவை தூக்கும் வயதில் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு

Anonymous said...

"என்வயசையும்மீறி
மனம் கொதிக்கும்
அதன்தகிப்பில்
என் கரம் எரித்து
ஒளி படைத்தேன்

உயிர் உருக்கி
வழி கடந்தேன்"

நிஜத்தின் வலியைச் சொல்லும் உணர்வுபூர்வமான வரிகள்.
தற்கலிகமாகவேனும் வலிதரும் எல்லாச் சூழலையும் கடந்து விடுங்கள் தம்பி.உயிரை உருக்கி வழியைக் கடக்க வேண்டியுள்ளதை அறிவேன்.கடந்து விடுங்கள்.வாழ்வின் உன்னதங்களை நீங்கள் தொட வேண்டும்.அதற்காகப் பிரார்த்திக்கிறேன்.

த.அகிலன் said...

நன்றி மன்சூர்ராசா மற்றும் பஹீமாஅக்கா இருவருக்கும்.

//பேனாவை தூக்கும் வயதில் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு//

அது விதியா மன்சூர்...

அன்புடன்
த.அகிலன்