Monday, September 11, 2006

நினைவுகள் மீது படியும் நிழல்…


எனை விலகி
புல்லின்
நுனியில் இருந்து
ஒரு பறவையைப்போல்
எழுகிறது
உன் முத்தத்தின்
கடைசிச்சொட்டு ஈரமும்

நான்
புதினங்கள்
அற்றுப்போன
செய்தித்தாளைப்போலாகிறேன்
நீயிராப்பொழுதுகளில்..


மழைநின்ற
முற்றத்தில்
உன்
காலடித்தடங்களற்ற வெறுமை
நிழலெனப்படிகிறது
நம்
நினைவுகளின்மீது

த.அகிலன்

5 comments:

Anonymous said...

//உன்
காலடித்தடங்களற்ற வெறுமை
நிழலெனப்படிகிறது

ஸ்ரீவி சிவா said...

நுட்பமான உணர்வுகளை அழகாகச் சொல்லுகிறீர்கள் அகிலன்.

//உன்
//காலடித்தடங்களற்ற வெறுமை
//நிழலெனப்படிகிறது

ur writing style influenced me a lot.I'm trying to write, atleast kavithai like you.

ஸ்ரீவி சிவா said...

நுட்பமான உணர்வுகளை அழகாகச் சொல்லுகிறீர்கள் அகிலன்.

//உன்
//காலடித்தடங்களற்ற வெறுமை
//நிழலெனப்படிகிறது

ur writing style influenced me a lot.I'm trying to write, atleast one kavithai like you.

Vaa.Manikandan said...

நல்ல கவிதை அகிலன் :)

//நான்
புதினங்கள்
அற்றுப்போன
செய்தித்தாளைப்போலாகிறேன்
நீயிராப்பொழுதுகளில்..//

புதினம் என்பது நாவல்தானே?

நாவலும் செய்தித் தாளும் இணைக்கப்பட்டிருப்பது கவிதையை தடுமாறச் செய்கிறது.

த.அகிலன் said...

நன்றி மணிகண்டன்,மற்றும் சிவகுமார்.மேலும் மணிகண்டன் நான் புதினம் என்பதை செய்தி என்கிற அர்த்தத்தில் தான் பாவித்தேன். புதினம் பார்த்தல் என்று சொல்லதுண்டு தானே நீங்கள் சொல்வது சரியாக இருக்கிறது தமிழ் குறித்த பெரிய புலமை எனக்கு கிடையாது மணிகண்டன் எனவே இனி எழுதும் பொது மயக்கம் வராமல் எழுதுகின்றேன்.