Wednesday, July 26, 2006

தீர்ந்து போகும் வெளிச்சம்...


நிபந்தனைகளுக்குள்
இருக்கிறது உலகம்…

ஒன்றிற்காய்
இன்னொன்று
அதற்காய் மற்றொன்று
இப்படியே
வாழ்வின்
ஒவ்வோர் அசைவும்
நிரம்பியிருக்கிறது
நிபந்தனைகளுள்..


நம்பிக்கையின்
கடைசிப்புன்னகையும்
சலனமற்றிருக்கிறது.

காலம்
திணைகள்
எதுவுமற்ற
மழலையின் மொழியென
நகரும் வாழ்க்கை

நினைவுகளின்
நீட்சியில்
என் நெஞ்சுறுத்திக்கிடக்கிறது
முட்கள்


திரையிடப்பட்டிருக்கிறது
ஒவ்வோர்
புன்னகையும்
பணிதலும் கூட

மின்மினிகளுமற்ற
இந்த இரவின்
துணைவன்
யார்?


இன்னும்
யாரிடமாவது
மிச்சமிருக்கிறதா
வெளிச்சம்.

2 comments:

ப்ரியன் said...

அழகாய் ஆழமாய் இருக்கிறது கவிதை வாழ்த்துக்கள் அகிலன்

Anonymous said...

அழகாய்த் தான் இருக்கிறது ஆனால் எனக்கு பயமாயிருக்கிறது.