Thursday, September 06, 2007

நம்பிக்கை/காத்திருப்பு


பெருமரத்தை
பூதமெனப் படியவிட்டு
உறுமிக்கடக்கிறது
வெளிச்சம்....

தனித்து நடக்கும்
இரண்டு பாதங்களைக்
கவனியாத
சகபயணியாய்
நீள நடக்கிறது தெரு
மெளனியாய்....

நான்
ஒரு நேரந்தப்பிய
பயணியைப்போல்
காத்திருக்கிறேன்
தூரத்தெரியும்
ஒளிப்புள்ளிகளை நம்பியபடி...

5 comments:

Ken said...

பெருமரத்தை
பூதமெனப் படியவிட்டு
உறுமிக்கடக்கிறது
வெளிச்சம்....

Nalla uvamai vaazthukal agilan

த.அகிலன் said...

சொதப்பலா ஒரு கவிதை போட்டேன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன. கென் அண்ணா இதைத்தான் குப்பையில் வைரம் என்கிறதா.

TBCD said...

//*தனித்து நடக்கும்
இரண்டு பாதங்களைக்
கவனியாத
சகபயணியாய்
நீள நடக்கிறது தெரு
மெளனியாய்....*//

நல்ல ஒப்புமை...

டி.அருள் எழிலன் said...

நான்
ஒரு நேரந்தப்பிய
பயணியைப்போல்
காத்திருக்கிறேன்
தூரத்தெரியும்
ஒளிப்புள்ளிகளை நம்பியபடி..."
நல்ல வரிகள்.
''தூரத்தில் தெரியும் நீர்ப்பரப்பானது கண்ணில் தூவிய நம்பிக்கை காரணமாக தவிர்த்து வருகிறேன் மரணத்தை கானல் நீராய் இருப்பின் அதை என்னிடம் தெரிவிக்க வேண்டாம்''என்று எப்போதோ படித்த வரிகளின் வலி இதிலும் இருக்கிறது.வாழ்த்துக்கள்..

த.அகிலன் said...

வாங்க அன்னியன் நம்ப வீட்டுக்கு முத தடைவையா வந்திருக்கீக நன்றி.
நீங்கள் குறிப்பிடும் அந்த வரிகள் தான்பிரீன் தொடரும் பயணம் என்கிற ரஸ்ய நாவலில் வந்ததா?.. ஏனேனில் எனக்கும் படித்த ஞாபகம்.