Tuesday, November 07, 2006
கடைசிக் கவிதை....
என் கடைசி வரிகளை
கடல் மடியில் எழுதி வருகிறேன்
யாரிடமும் பகிர்ந்து கொளமுடியாத படிக்கு
பேசாமல் இருக்கும்
அலைகளிடம்
தொலைந்து போகும்
கண்ணீர்த்துளியைப் போல
போய் விடட்டும்
என் கவிதை
எல்லாம்
முடிந்து போய் விட்டது
எப்போது கேட்டாலும்
யோசிக்காமல்
பணம் தரும் பெரியம்மாவின்
கண்ணீர் நிறைந்த முகம்
கடந்து வந்தாகி விட்டது
இனி
மறுபடியும் வீட்டு முற்றத்துக்குப்
போய்விட முடியாது
இனி
அண்ணியிடம் சோற்றைப்
பிசைந்து தருமாறு சண்டையிட முடியாது
இனி
குட்டிப் பையனின் எச்சில் முத்தங்கள்
கிடையவே கிடையாது
இனி
என் தேவதையை
உயிர் கொல்லும்
அவள் கண்களை மறுபடியும்
சந்திக்கவே முடியாது
இனி எப்போதும்
உயிருள்ள ஒரு கவிதை
என்னால்
எழுதவே முடியாது.
த.அகிலன்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
சகோதரா!
கவலை கொள்ளாதே - உன்
கண்ணீர் துடைக்க
புது உறவுகள் மலரும்.
இனி உனக்கு மலரும் பொழுதுகள்
நல்லதாகவே அமையும்.
:-(((((((((((((((((((((((((
//இனி எப்போதும்
உயிருள்ள ஒரு கவிதை
என்னால்
எழுதவே முடியாது.//
என்னங்க ஆச்சு !
சோகம் நெஞ்சை தொடுது !
புதுப்படம் எதாவது பார்த்துட்டு, நன்றாக எண்ணையைத் தேய்த்துக் குளித்துவிட்டு ஒரு தூக்கம் போட்டால் எல்லாம் சரியாகிவிடும்!
நன்றி லக்கிலூக் அண்ணை உங்கள் ஆறதல் என்னை தேற்றும்.பாலாஅண்ண என்ன சிரிப்பு இது ம்.
ஆலேசாசனைக்கு நன்றி கோவிகண்ணன்.
அன்புடன்
த.அகிலன்
தம்பி அகிலன்,
படம் தவிக்கின்ற மனதை இன்னுமின்னும் பிறாண்டுகிறது.
விரைவில் நல்லது நடக்கும்.
நம்பிக்கை இழக்கவேண்டாம்.
ஃபஹீமாஜஹான்
Post a Comment