Wednesday, November 22, 2006

தனிமனித தாக்குதல்களும் செ.வலைப்பதிவர் சந்திப்பும்

சென்னை வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டாலும் கொண்டேன்.அப்பா ரொம்ப்பிரபலமாயிட்டேனோ என்று தோன்றுகிறது.ஈழப்பிரச்சினையை சார்ந்த வாதப்பிரதி வாதங்கள் அதில் நான் தெரிவித்த கருத்துக்கள் அதை ஏற்றுகொண்டவர்கள்,கொள்ளாதவர்கள் அவர்களின் கருத்துக்கள் இப்படி சென்னை வலைப்பதிவர் சந்திப்புக்கு சென்ற காரணத்தால்
எனக்கும் நிறைய நன்மைகள் கிடைத்துள்ளன. சென்னை வலைப்பதிவர் சந்திப்பு குறித்து சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் கலந்து கொள்ளாதவர்கள் என்று நிறையப்பேர் எழுதித்தள்ளிவிட்டார்கள் (நானும் ஜோதியில் கலந்து கொள்ளவேண்டாமா)அது மட்டுமல்ல சூடான விவாதங்களும் தனிமனித தாக்குதல்களும் அதனை தொடர்ந்தான மனத்தாக்கங்களும் ஏற்பட்டுளன.அது குறித்து கட்டுரைகள் குறிப்புகள் எழுதியவர்களில் அரைவாசிக்கும் மேலே என்பெயரைக்குறிபிட்டு எழுதியிருக்கிறார்கள். முடிந்தவரை லிங்க் வேறு கொடுத்திருப்பதால் என் கிட்கவுண்டரும் பரவாயில்லாமல் போயிருக்கிறது.இதை எப்படி எடுத்துக்கொள்வதுஎன்பது எனக்கு தெரியவில்லை ஆனால் சென்னை வலைப்பதிவர் சந்திப்பிற்கு என்னை முதலில் அழைத்த லக்கிலூக் மற்றும் பாலபாரதி பிரியன் ஆகியவர்களுக்கு எனது நன்றிகள் என்றைக்கும்.

சென்னைப்பபட்டண வீதிகளும் விதிகளும் தெரியாத என்னை சந்திப்பு நடக்குமிடம் வரை அழைத்துச்சென்று மறுபடியும் என்வீட்டுவாசல்வரை கொண்டு வந்து விட்ட விக்கி(பிரியன்) அண்ணாவுக்கு என் விசேட நன்றிகள்.

நான் ஒரு பதட்டத்துடனும் மகிழ்ச்சியுடனும் தான் பிரியன் அண்ணாவுடன் சென்றேன். அரங்கினுள் ஒரு ஓரமாக உட்கார்ந்திரநத என்னை திடீரென்று பாலபாரதி அண்ணா முன்னுக்கு வா என்று அழைக்கவும் இவன் சொல்றதை கொஞ்சம் கேளுங்க என்று அங்கிருந்தவர்களை கேட்டுக்கொள்வும் மிகச் சிறப்பான அந்த அனுபவம் எனக்கு வாய்த்ததது. ஈழம் குறித்து அத்தனை ஆர்வத்துடன் அவர்கள் கேட்டார்கள் ஆர்வத்துடன் என்னைக் கவனித்தார்கள் ஆச்சரியப்பட்டார்கள் கவலைப்பட்டார்கள். எனக்கு நம்பிக்கையாக இருந்தது ஈழமக்கள் தனித்தில்லை ஆதரவோடு இருக்கிறோம் எங்கள் இந்திய உறவுகள் எங்களை கடைசி வரை கைவிட மாட்டார்கள் என்று இந்த சென்னை வலைப்பதிவர் சந்திப்பு எனக்கு உணர்த்தியது. அதற்காக அந்த சந்திப்பினை ஏற்பாடுசெய்த சென்னைப்பட்டினம் நண்பர்களுக்கும் பாலபாரதி அண்ணாவிற்கும் என் நன்றிகள்.

லக்கிலூக் அவரது பதிவில் அகிலன் அருமையாகப்பேபசினார் என்றிருக்கிறார். நான் சொல்கிறேன்.நான் அருமையாகவெல்லாம் பேசவில்லை கொஞ்சம் உண்மைகள் சொன்னேன். அவ்வளவுதான் ஈழம் இவற்றையெல்லாம்இழந்திருக்கிறது இவற்றையெலல்லாம் தனக்குள் வைத்திருக்கிறது.என்று என் அனுபவங்களைப்பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான். அதிலும் நான் உங்களோடு பகிர்ந்து கொண்டது கொஞ்ச உண்மைகள்தான் இன்னும் புண்கள் என்னிடமுண்டு
நாங்கள் மனிதர்கள் மாதிரி நடத்தப்படாத சந்தர்ப்பங்ககள் சொல்லலாமா வேண்டாமா என்று சொல்லக்கூசுகிற அவமானங்கள். எல்லாம் என்னிடம் இருக்கிறது.

விக்கி(பிரியன்) அண்ணா என்னை அழைத்துப்போகும் போது சொன்னார் வந்து விட்டீர்கள் அல்லவா போகப்போகத்தெரியும் இந்த வலைப்பதிவர்களின் சண்டைகள் குறித்து என்று . எனக்கு இப்போது பார்க்க பயமாகத்தான் இருக்கிறது.இத்தனை காழ்ப்புணர்வா இத்தனை ஓட்டுமாட்டடா என்று ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இலக்கிய உலகில் சிறபத்திரிகைச்சூழலில் எப்படி வெட்டுக்குத்து தனிமனித தாக்குதல் என்று கிளுகிளுப்பாகவும் சூடாகவும் போகிறதோ அதைவிடப்படுகேவலம் இங்கே ஒரு சில ஆறுதல்களைத் தவிர தனிமனித தாக்குதல்கள் மலிந்துவிட்டதா வலைப்பதிவுலகில். இதற்கு மேலும் இது குறித்து பேசினால் என்னையும் போட்டு குமுறி கும்மி அடித்து விடுவார்கள் எனவே நான் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.கட்டாயம் இது குறித்து ஒரு தனிப்பதிவு விரைவில் போடுவேன்.

இந்நதச்சந்திப்புக்கு என்னை அழைத்து பேசுவதற்கும் சந்தர்ப்பம் கொடுத்த சென்னைப்பட்டினம் நண்பர்கள் மற்றும் பாலபாரதி அண்ணா, இந்தச்சந்திப்பு தொடர்பாக வும் அதன்பின்னால் ஏற்பட்ட ஈழமக்கள் மீதான அக்கறை குறித்தும் பதிவுகள் போட்ட வலைப்பதிவர்களிற்கும் என் சார்பாக அல்லது தமிழ்ஈழ மக்கள் சார்பாக பின்னூட்டங்களில் நன்றி சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள்.

த.அகிலன்

10 comments:

மாயவரத்தான் said...

//ஈழமக்கள் தனித்தில்லை ஆதரவோடு இருக்கிறோம் எங்கள் இந்திய உறவுகள் எங்களை கடைசி வரை கைவிட மாட்டார்கள் //

அது..!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அகிலன்!
பலர் தங்கள் பேச்சைக் குறிப்பிட்டிருந்தார்கள். தயவு செய்து அந்தப் பேச்சின் சுருக்கமான ஓர் எழுத்துருவைப் பதிவிடலாமே!!!
நாம் படித்தாவது பார்ப்போம்.
யோகன் பாரிஸ்

மலைநாடான் said...

அகிலன்!

எதிர்பாராத நேரத்தில், கிடைத்த சந்தர்ப்பத்தில், எங்கள் உறவுகள் பற்றிய அக்கறையினையை, ஆதங்கத்தினை, சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள். பாராட்டுக்கள்.

மணியன் said...

//தயவு செய்து அந்தப் பேச்சின் சுருக்கமான ஓர் எழுத்துருவைப் பதிவிடலாமே!!!//

நானும் வழிமொழிகிறேன்!!

த.அகிலன் said...

எல்லாமே சென்னைப்பட்டினம் வலைப்பூவில் இருக்கிறது நான் வேறு தனியாக போட வேண்டுமா அனைவருக்கும் நன்றி

சின்னக்குட்டி said...

இவர்களின்..உள்குத்து வெளிகுத்து பிரச்சனைக்குள்ளும்....வீடியோவில் பார்த்தேன்... உங்கள் பேச்சால் இவர்களை கட்டி போட்டிருந்தீர்கள்...பாராட்டுக்கள்..... அகிலன்....

மஞ்சூர் ராசா said...

லக்கி லுக்கின் பதிவில் உங்கள் உரையைப்பற்றி அவர் சிலாகித்திருந்தார். உங்களின் மனதில் மேலும் பல புண்கள் இருப்பதையும் இந்த பதிவில் இட்டிருக்கிறீர்கள்.

தமிழ்நாட்டு மக்கள் தமிழீழ மக்களுக்கு என்றும் ஆதரவாகத்தான் இருக்கிறார்கள். இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

ஃபஹீமாஜஹான் said...

தம்பி,
இந்தப் பதிவைக் காண ஆவலுடன் இருந்தேன்.

ஃபஹீமாஜஹான்

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இன்னொரு பதிவில் youtube மூலமாக உங்கள் பேச்சைப் பார்த்தேன். செர்மனியில் தமிழாலயப் பள்ளிக்கூடங்களில் சிறது காலம் பணி செய்திருக்கிறேன். அங்குள்ள குழந்தைகள் அன்பு மயமாய் மாமா மாமா என்று அழைப்பதே ஒரு பேரின்பம். உங்கள் பேச்சை பார்த்த போது அது தான் நினைவுக்கு வந்தது. தமிழ்நாட்டில் எல்லாம் uncle மயமாகி விட்டது. கிராம்ப்புறங்களில் அண்ணா என்று அழைப்பார்கள்...தொடர்ந்து எழுதுங்கள். இந்த சந்திப்புக்காக மெனக்கெட்டு இலங்கையில் இருந்து சென்னை வந்தீர்களா என்ன?

Anonymous said...

லக்கிண்ணாவின் பதிவில் படித்தேன்...உங்கள் பதிவை எதிர்பார்த்திருந்தேன்..