Tuesday, August 29, 2006

அழகுதிர்ந்த கவிதை


என்னிடம்
மகிழ்ச்சியின்
சுவடு தானுமில்லை

என்னால்.....
உலர்ந்து போன
இரத்தத்தின் அடியில்
ரோஜாவின் இதழ்களைக்
கற்பனை செய்ய முடிகிறது

நேற்றுப் பிடுங்கியெறியப்பட்ட
பெருமரத்தின்
மொட்டுக்களையும்
பிஞ்சுகளையும் குறித்த
துயர்மிகும் சொற்கள் மட்டுமே
இப்போது
என்னிடமுண்டு

அழகுதிர்ந்த கவிதை
துயரமும்
பிணமும் நாறிக்கிடக்கும்
தெருவழியே
அழுதலைகிறது

கேள்விகளற்ற
நிலத்தில்
துயர்மிகும்
சொற்களைத் தவிரவும்
வேறென்னதான் இருக்கமுடியும்?

த.அகிலன்

1 comment:

நவீன் ப்ரகாஷ் said...

//கேள்விகளற்ற
நிலத்தில்
துயர்மிகும்
சொற்களைத் தவிரவும்
வேறென்னதான் இருக்கமுடியும்//

அகிலன் மிக எதார்த்தமாக நிஜத்தைப் பேசுகிறது கவிதை. சூழ்நிலைகளின் பாதிப்பை இக்கவிதை வலுவாக உணர்த்துகிறது.