Sunday, July 30, 2006

மெளனம்...


எல்லாவற்றையும்
உன்னுள்ளே குமைத்து
ஏன்
நீ
மௌனம் சமைக்கிறாய்.

எல்லாவினாவுதல்களின் போதும்
உன்
புன்னகைக்குள்
எதனை நீ
சொல்லநினைக்கிறாய்

ஒலிகள்
எதுவுமற்ற
உனது மொழி
இரைச்சலை ஜெயிக்குமா?

அடுத்தவனையே
பேசுபொருளாக்கி
எப்போதும்
அலைகிறது உலகம்.

அதனாலும்
மௌனம் நிறைவுதான்
ஆனால்
சலசலப்பே
சங்கீதம் என்றாயிற்று.

ஏது சொல்ல

மௌனம்
ஒரு மின்சாரத்தைப்போல
பாதைகளைப்பற்றிய
அக்கறைகளற்றுப் பயணிக்கும்
வேகமாய்.

எப்போதும்
மொட்டுக்களின்
மௌனம் உடைகையில்
தான் அழகு

நீ
பேசு
கண்ணிவெடிகளின்
நிலத்தில் நடப்பதைப்போல்
சற்றே அசந்தாலும்
காத்துக்கிடக்கிறது இரைச்சல்
உனக்கான வார்த்தைகளை
ஓலமிட..

த.அகிலன்

4 comments:

Anonymous said...

ரொம்ப நல்லா இருக்கு, தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

Anonymous said...

"மௌனம்
ஒரு மின்சாரத்தைப்போல
பாதைகளைப்பற்றிய
அக்கறைகளற்றுப் பயணிக்கும்
வேகமாய்"

"நீ
பேசு
கண்ணிவெடிகளின்
நிலத்தில் நடப்பதைப்போல்
சற்றே அசந்தாலும்
காத்துக்கிடக்கிறது இரைச்சல்
உனக்கான வார்த்தைகளை
ஓலமிட.."


கவிதை நன்றாக உள்ளது தம்பி

கிவியன் said...

நம்ம பதிவு தளத்துக்கு கவிதையே வடிச்சுட்டாங்கன்னு சொன்னாங்க அதான் வந்து பாத்தேன்.


//நீ
பேசு
கண்ணிவெடிகளின்
நிலத்தில் நடப்பதைப்போல்
சற்றே அசந்தாலும்
காத்துக்கிடக்கிறது இரைச்சல்
உனக்கான வார்த்தைகளை
ஓலமிட..//

மிக நுட்பமாய் வந்திருக்கிரது கவிதை..

த.அகிலன் said...

ம் கிவியன் நானும் இப்பதான் உங்க தளத்துக்கு போய் பார்த்தேன் மெளனம் னு பேரை வைச்சுக்கொண்டு கும்மாளம் போடுறீங்கப்பா