Friday, July 14, 2006

புழுக்களைத்தின்னும் பூக்கள்...


பூக்கள் சிதறிய வனத்தின்
விழிகள் எங்கும்
புழுக்களின் ஆக்கிரமிப்பு

வாசம் இழந்து
வாழ்வழியும் நிலையில்
பூக்கள்.

அவற்றில்
மலர்ச்சி மறைந்து
வேதனை வடுக்கள்
விழிகளில் வழிந்தது.

இதழ்களில் எங்கும்
துழைகளின் நிழல்கள்
அந்நிழல்களின்
இருளில் அமிழ்ந்து போயிற்று
பூக்களின் வாழ்தல் பற்றிய நினைப்பு

பூக்கள் இப்போது
புழுக்களைத்தின்றன
தம்
இயல்பு துறந்து.

த.அகிலன்

1 comment:

Yuvraj Sampath said...

தம்பி
பூக்கள் புழுக்களை தின்பது
இயல்பு திரிந்து அல்ல..

அது காலத்தின் கட்டாயம்.
நான் பூ

காடயன் புழு..

இப்பொது எது நியாயம்?