Thursday, July 27, 2006
காதல்..
காதல்
ஒரு
நதியின் நடனத்தைப்போல
மேகத்தின் பயணத்தைப்போல
இலக்குத்தேடியலையும்
வேட்டைக்காரனாய்
இதயத்தை நெருங்குகிறது.
சூரியனின்
காதல்
மரங்களின்
பசிய இலைகளில்
வழிகிறது.
நிலவின்
காதல்
முற்றத்தில் பொழிகிறது
கருணையோடு
குழந்தையின்
காதல்
ஒரு புன்னகையில்
இப்படியே
இறுதியில்
துளித்துளியாய்
பிரபஞ்சம்
காதலால்
நிரம்பி வழிகிறது.
பூக்களின்
இரகசிய முத்தங்கள்
காற்றில் கரைந்து
கன்னங்களை வருடுகிறது..
த.அகிலன்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அருமையான கவிதை.
அருமையான கவிதை.
சார் சோம்பேறி பையனா இருந்து கொண்டு நீங்கள் தந்த வாழ்த்துக்க நன்றி ஆனா 4 தடவைகள் ஏன் இட்டீர்கள் ஒரே வார்த்தையை மறுபடி மறுபடி ஏன்
Post a Comment