Tuesday, July 25, 2006

காயங்கள்


வெற்றுக்கண்களுக்குச்
சிக்கிவிடாமல்;
காயங்கள்
நிறைகின்றன
மேனியெங்கும்
உணர முடிகிறது
என்னால்…..

ஒரு புன்னகை
ஒரு முத்தம்
அல்லது
ஒரே ஒரு பார்வையின்
பகிர்தல்கூடப்போதுமானதாயிருக்கும்
அவற்றை ஆற்றிவிட

ஆனால்
நண்பர்களே
நிச்சயமாய்
பலிகள் தேவையில்லை

பூக்களின்
செண்டுகளில் இருந்து
கத்திகளை எடுங்கள்
காயங்கள்
இனியும் வேண்டாம்..

த.அகிலன்

2 comments:

Anonymous said...

"ஒரே ஒரு பார்வையின்
பகிர்தல்கூடப்போதுமானதாயிருக்கும்
அவற்றை ஆற்றிவிட

ஆனால்
நண்பர்களே
நிச்சயமாய்
பலிகள் தேவையில்லை"

உண்மைதான்.
இந்த சாபம் பிடித்த பூமிக்கு அன்பான பார்வை போதும் தம்பி.அதன் பின்னர் எல்லாம் சரியாகும்.
தினந்தோறும் சாவுகளையே காண நேர்கிறது.ஒரு பொற்காலம் பற்றிக் கனவில் கூட நினைத்துப் பார்த்திட முடியவில்லை.

Unknown said...

தொடருங்கள் அகிலன் அருமையான கவிதை. வாழ்த்துக்கள்