Monday, July 10, 2006
முழுவதும் உனக்கே..
என் காதலே!
இந்தப் பூமிப்பந்தின்
எல்லா நுனியிலும்
நீதான்
நிறைந்து கிடைக்கிறாய்…..
என் வார்த்தைகள்
திணறும்.
உனை
விபரிக்கச் சொல்லற்றுத்துடிக்கும்
என் கவிதை….
உதிரமுடியாத
ப+க்களை எப்படித்தான்
கைவசம் வைத்திருக்கிறாய்
மாறாச் சிலிர்புடன்
காதலின் தெருக்கள் எங்கும்
விரவிக்கிடக்கிறது பூக்கள்.
குடித்துத் தீர்ந்தபின்பும்
திகட்டித் திகட்டி
மிஞ்சிக்கிடக்கிற
அன்பின் பானமாய்
நிறைந்து வழிகிறாய்..
என்
வாழ்வின்
ஒவ்வொருதுளியிலும்
உனக்குத்தான்பாதி
சீச்சி
முழுவதுமே உனது
த.அகிலன்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நடை அழகு,எண்ணம் புதுமை........
எனக்கும் உஙளைப் போல் எழுத ஆசை....எனது கனவுகலளையும் வந்து பாருஙகள்....
கார்த்திக்
தம்பி,
யுத்தச் சூழலில் இருந்து கொண்டு இத்தனையையும் செய்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.
இன்னமும் முயற்சிக்க வேண்டும். மற்ற தலைப்புகளில் ஏன் கவிதைகள் ஏன் வருவதில்லை?
Post a Comment