Tuesday, July 04, 2006

கடனுக்கு வரும் கனவுகள்...



என்
இனிய காலமே
எனது கனவுகளை
சுமந்து கொண்டிருக்கிறாய்….

நான்
எப்போதும்
தாகமாயுணர்கிறேன்

ஒரு
பெருநதியின் எதிரிலும்…

பூக்களின் வாசனை
எங்கே ஒளிந்துகொண்டிருக்கிறதோ
அங்கேயே
என் கனவுகளும்;.

புனிதமாயிராத
என் கனவுகள்
எப்போதும்
அலைகின்றன
என்னைச்சுற்றி நச்சரித்தபடி..

ஆனாலும்
கனவுகளைக் கடைசிவரை
சேமிப்பேன்
தூக்கங்களற்ற
ஒரு பெருவெளிக்காய்
அற்றைக் கடன்கேட்டு
யாரேனும் வரலாம்..

த.அகிலன்

3 comments:

Sivabalan said...

அகிலன்,

// யாரேனும் வரலாம்.. //

ஆகா அருமை.

நன்றி

Anonymous said...

தம்பி அகிலன்,
தெரிவு செய்துள்ள படம் கவிதையை மேலும் அழகு படுத்தியுள்ளது.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றாக இருக்கிறது உங்கள் கவிதை!