Saturday, July 01, 2006
உன்புன்னகை குறித்து
பூக்களால் ஆகிறது
ஒரு கவிதை.
என் எதிரில்
பூக்களைத் தவறவிடா
உன் உதடுகள்.
ஆனாலும்
நான்
நிறையப் பூக்கள்
கொண்டு வருகிறேன்
புறந்தள்ளிப்போகிறாய்....
அவை
ஒவ்வொன்றாய்
வாடி வீழ
உன்
ஒவ்வொரு மறுதலிப்பின்
முடிவிலும்
நான்
பூக்களைச் சேமிக்கிறேன்.
ஒரு
பட்டாம்பூச்சியைப்போல்
சட்டென்று ஒட்டிப்
பறந்து போகிறது
உன்
புன்னகை.
த.அகிலன்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
தம்பி,
உங்களைப் பாதித்த புன்னகையைப் போலவே கவிதைகளும் அழகாக உள்ளன.
I like your poam
Post a Comment