Saturday, June 24, 2006
அடுத்து வரும் கணம்......
என்னுடைய
காலடிச்சுவடுகள்
கண்காணிக்கப் படுபவை
புன்னகைகள்
விசாரணைக்கானவை
உயிர் குலையும்
ஓர் ஊரின்
பெரும்பயணி நான்
அடுத்த கணங்கள்
பற்றிய
அச்சங்களும்
துயரங்களும்
நிரம்பிக் கிடக்கிறது
வழிமுழுதும்
துயரெழுதும் கவிதை
வழிமுழுதும்
வருகிறது துணைக்கு
தொலைவிலெழும் வேட்டோசைக்குச்
செத்துப்போகிறான்
என்சகபயணி
துப்பாக்கிகளிற்குக்
கால்கள் முளைத்த இரவில்
அவை வெறிகொண்டெழுந்தன
ஒரு கலையாடியின் கோபம்போல
இரவு முழுதும் பெய்த மழையில்
கரைந்து போயிருந்தது
பலியாடுகளின் இரத்தம்
அடுத்த கணங்கள்
பற்றிய
அச்சங்களும்
துயரங்களும்
நிரம்பிக்கிடக்கிறது
வழிமுழுதும்
த.அகிலன்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
கிளிநொச்சியிலிருந்து எழுதுகிறீர்களா?
//அடுத்த கணங்கள்
பற்றிய
அச்சங்களும்
துயரங்களும்
நிரம்பிக்கிடக்கிறது
வழிமுழுதும்//
ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு விதமான பதட்டங்கள். "பயங்கரவாதத்திலிருந்து" காப்பாற்ற என்று சொல்லி ஒவ்வொரு பல இளைஞர்களைத் தூக்கி உள்ளே போடுகின்றன மேற்கு நாடுகள்.
ஆனா இங்கு வாழ்கிறவர்கள் கவனமாக அந்த உலகங்களிலிருந்து தொடர்பறுபட்டு உள்ளார்கள்.
==
தொடர்ந்து எழுதுங்கள்.
யாருங்க நீங்க கிளிநொச்சியில் இருந்தா என்று சந்தோசப்படுகிறீர்களா?நீங்க எந்த ஊரோ என்ன பேரோ
ஐயோ.. கிளிநொச்சியில இருந்து எழுதினா சந்தோசம் எண்டிறது இல்லை. தெரிந்த ஊர் என்று ஒரு பாசம் :-)
மற்றப்படி
நமக்கு ஒரு ஊருமில்ல
பேருமில்ல - தெருவில் வசிப்பவர்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!
Post a Comment