கூரையின்
முகத்தில் அறையும்
மழையைப்பற்றிய
எந்தக்கவலையும் அற்றது
புது வீடு
இலைகளை உதிர்த்தும்
காற்றைப்பற்றியும்
இரவில் எங்கோ
காடுகளில் அலறும்
துர்ப்பறவையின் பாடலைப்பற்றியும்
எது விதமான துயரமும் கிடையாது
புது வீட்டில்
ஆனாலும் என்ன
அதன்
பெரியயன்னல்களினூடேநுழையும்
நிலவிடம்
துளியும் அழகில்லை......
த.அகிலன்
1 comment:
நன்றாய் வந்திருக்கிறது கவிதை. நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்
Post a Comment