Monday, June 26, 2006

நிஜம்....



என்
மரணத்தின்போது
நீ ஒரு உருக்கமான
இரங்கல் கவிதையளிக்கலாம்
ஏன்
ஒரு துளி
கண்ணீர்கூட
உதிர்க்கலாம்

என்
கல்லறையின் வாசகம்
உன்னுடைதாயிருக்கலாம்
அதை
ப+க்களால் நீ
நிறைக்கலாம்

நீ
என்னோடு அருந்தவிருக்கும்
ஒரு கோப்பை தேனீரோ
வரும்
பௌர்ணமியில்
நாம் போவதாய்ச் சொன்ன
கடற்கரை குறித்தோ
என்னிடம்
எண்ணங்கள் கிடையாது

இப்போது
என் எதிரில் இருக்கும்
இக்கணத்தில்
உன் புன்னகை
உண்மையானதாயிருக்கிறதா?

த.அகிலன்

2 comments:

முபாரக் said...

பெரும்பாலும் உங்கள் கவிதைகள் காதல் சார்ந்த கவிதைகளாயிருப்பினும் பாசாங்குகளோ வெற்றுப்பூச்சுகளோ அற்றவையாயிருக்கின்றன. உயிரோட்டம் மிக்க வரிகள்.

கவிதைகளைப் போலவே வடிவமைப்பும், புகைப்படங்களும் மேன்மேலும் அழகு சேர்க்கின்றன. ஆழ்ந்த சிரத்தையோடு பக்கங்களைச் செய்திருக்கிறீர்கள்.

மேன்மேலும் சிறப்பான கவிதைகளை எழுத வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதி வாருங்கள். வாழ்த்துக்கள் அகிலன்

சினேகமுடன்
முபாரக்

சேதுக்கரசி said...

தமிழ்மணத்தில், மறுமொழியப்பட்ட இடுகைகளில் இப்போது வருகிறது அகிலன்!