அழுதுவடியும்
விளக்கு
தோற்றுப்போகிறது
இருளிடம்
எங்கும்
நிரப்பிக்கொண்டேயிருக்கிறது
இருள்
தன்னை.
ஒளியற்றவெளியில்
பதுங்கிக்கிடக்கும்
உன்
புன்னகை
ஒரு திருட்டுப்பூனையைப்போல்
நுழைகிறது
கனவுகளில்..
அதன்
கால்களில்
இடறி
கறிச்சட்டியைப்போல்
நொறுங்கும்
என் தூக்கம்
த.அகிலன்
1 comment:
அழகான வித்தியாசமான ஒப்பீடோடு ஒரு காதல் கவிதை மிக நன்றாக இருக்கிறது1
வாழ்த்துக்கள்!
Post a Comment