Thursday, June 08, 2006
புன்னகையின் பயணம்
சூரியன்தன் ரகசியங்களோடு
நுழைகின்றான் எங்கும்
விசாரணைகள் ஏதுமின்றி
எங்கும் நிரம்பிவழிகிறது
சூரியனின் ரகசியங்கள்
காற்றுக்குக்கேள்விகளுமில்லை
வேலிகளுமில்லை
என்னுடையதும்
உன்னுடையதும்
கனவுகளுக்கும் கூடரகசியம் கிடையா
எனதுமுற்றத்தில் விழுகிறது
பச்சை வேட்டைக்காரர்களின்நிழல்…..
துப்பாக்கியின்கண்களிடம்
காதல் இல்லை
கோபமும் கிடையாது
ஒருபெருநதியின்ஆழத்தில்
தொலைக்கப்பட்டு விட்ட சாவி
என்னிடம்நம்பிக்கைகள் இல்லை
முதலைகளால்
அதை மீட்டுவிட முடியுமென்று…..
சூரியனின்தடங்களற்ற தொலைவிற்கும்
காற்றால்காவுகொள்ளப்பட
முடியாதசுவடுகளைக் கைவிட்ட படியும்
குயிலின் குரல்வழியேபயணிக்கும்
என்புன்னகையாரும் அறியாதபடிக்கு….
த.அகிலன்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வலைப்பூ துவங்கியதற்கு வாழ்த்துக்கள் அகிலன்!
comment moderation தெரிவு செய்யுங்கள், இல்லாவிட்டால் குப்பைப் பின்னூட்டங்கள் வர வாய்ப்புண்டு.
Post a Comment