Monday, August 13, 2007

கோடையைப் பற்றி இரண்டு குறிப்புக்கள்..



01.
உன்
உப்புக்கரித்த முத்தத்தின்
ஞாபகங்களை
தனது இறகுகளால்
வருடிக்கொண்டேயிருக்கிறது கோடை.

வாசல் வரை வந்தும்
உள்ளே வராத
தோழியைப்போல்..
முற்றத்தில் படர்ந்து
பின்
வெளியேறிப்போகிறது வெயில்

அறை முழுதும்
தன் தகிப்பை நிரவியபடி.


02.
கோடை
தீர்ந்து விட்டது…

தகிப்பின்
வாடையை

குடித்தபடி அலைந்து
நிழலொடுங்கிக் கிடக்கிறது
கோடையின் குழந்தை….

மழைக்குத் தாளமிடும்
சிறுமியின் புன்னகை
கூரை
கடந்து விழும்
முதல் துளியில்
கரைந்தவிழ

அவள்
காலடியில் உடைந்து
அழத்தொடங்குகிறது
கோடை..

12 comments:

Anonymous said...

ஒரு சில மீள் வாசிப்புகளின் பின்பு
மன அடுக்குகளில் எதையொ விட்டு விட்டு நழுவிப் போய் விடுகின்றன உங்கள் கவிதைகள்...
மிருதுவான இயற்கையை பற்றிக்கொண்டு கோர்க்கப்படுகிற சொற்கள் ஏதொ ஒரு சிலிர்ப்பை ஊட்டவே செய்கின்றன... நன்று.
வாழ்த்துககள்...
உங்களை ஆழ வாசிக்கிறேன்..

வேல்.சாரங்கன்
www.vaanampaadi.blogspot.com

த.அகிலன் said...

அப்படியா நன்றி சாரங்கன்.

Ken said...

உப்புக்கரித்த முத்தத்தின்
ஞாபகங்களை


அறை முழுதும்
தன் தகிப்பை நிரவியபடி.

:)))

த.அகிலன் said...

கென் என்ன சிரிப்பா சிரிக்கிறீங்க சொல்லீட்டு சிரிங்கய்யா அதில காமெடி என்ன இருக்குன்னு....

Unknown said...

கென் அப்படித்தான் அகிலன்..

முத்தத்தைப் பற்றிப் பேசினாலே இப்படித்தான் சிரிக்க ஆரம்பித்துவிடுவான். ஏனென்றுதான் தெரியவில்லை.

சிறுமியின் புன்னகைக்கு முன் கவிழ்ந்தழுத கோடை அழகு அகிலன்..

Anonymous said...

பல தடவைகள் படித்தேன்..
அருமை

தறுதலை said...

வாசல் வரை வந்தும்
உள்ளே வராத
தோழியைப்போல்..
முற்றத்தில் படர்ந்து
பின்
வெளியேறிப்போகிறது வெயில்

அறை முழுதும்
தன் தகிப்பை நிரவியபடி.

.......

அட்றா சக்க.... அட்றா சக்க....

நிஜமாவே கவிததான் எழுதறீங்க.....



-தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-07)
என் வாழ்க்கை இணயம் முழுவதும் கழிந்து கிடக்கிறது

நளாயினி said...

கென் a dit...
உப்புக்கரித்த முத்தத்தின்
ஞாபகங்களை


அறை முழுதும்
தன் தகிப்பை நிரவியபடி.

:)))


mm.

ம்.. ஆழ்ந்த அவதானிப்பு. பாராட்டுக்கள் கென். அகிலனுக்கும் தான்.

த.அகிலன் said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

நளாயினி said...

என்ன அகிலன் டக்கெண்ட எஸ்கேப்பான மாதிரி ஒரு உணர்வு எனக்குள். கவிதைகள் உணர்வை பேசும். கண்ட பிடிப்பது வாசகரின் வேலை. ம்.. எப்பதான் உண்மையை உண்மை என சொல்லப்போறியளோ. ம்.. அதுக்கும் ஒரு தில் வேணும். கவிதை எழுதினா மட்டும் போதாது.ghtk; cq;fil Ms;.

த.அகிலன் said...

அது சரி என்ல ஆள் பாவம் எண்ணடதெல்லாம் இருக்கட்டும் நளாயினி அக்கா.

என்ன நான் எஸ்கேப்பானான் அதைச்சொல்லுங்கோ.

எந்த உண்மைய நான் சொல்லவில்லை...எதை ஒத்துக்கொள்ளவில்லை என்ன தில்வேணும் கொஞ்சம் விளக்கினா உங்களிற்கு புண்ணியமாப்போகும்.

கடைசியா என்ன என்ன கவிதை எழுதலாம் எண்ணடிறியளா வேண்டாம் எண்டிறியளா

நளாயினி said...

ஐயோ போச்சுடா. எழுதுங்கோ எழுதுங்கோ. தாரளமா. ஆச்சரியமான கவிதை மொழிகள். உணர்வுகள். ரசிக்க என்போன்ற வாசகர்கள் காத்திருக்கிறோம்.- பின்னூட்டமிட்டால் தான் உங்கள் கவிதையை ரசிக்கிறோமென்றில்லை. அப்பப்போ நேரமிருக்கிற நேரம் பின்னூட்டமிடுகிறோம் அவ்வளவு தான். அதற்காக கவிதை எழுதாமல் இருந்து விடாதீர்கள்.உங்கள் கவிதைப்பணி தொடர வாழ்த்துக்கள்.