Thursday, June 14, 2007

நிகழ்தல்....


நீ
என்ன சொல்கிறாய்….

னௌனம் கீறிய
என் வார்த்தைகளை
விழுங்கிப்போகும்
உன்பார்வைகளில்…
மிதந்து வருகின்றனவா
ஏதேனும்
எனக்கான சேதிகள்….

அலைகள் ஓய்ந்தபின்
ஆழ ஊடுருவும்
பார்வைகளுக்குச்சிக்காது…
ஏகாந்தத்தில்
நுழைந்துவிடுகிறது…
நீ எறிந்த கல்….

அர்த்தமற்று உளறும்
என்பேச்சு…
சில பொழுதுகளில்
விக்கித்து நிற்கும்
என் மௌனம்…
போதுமானதாயிருக்கிறதா?
நான்
உனக்குள் நிகழந்துவிட….

1 comment:

Ken said...

"அர்த்தமற்று உளறும்
என்பேச்சு…
சில பொழுதுகளில்
விக்கித்து நிற்கும்
என் மௌனம்…
போதுமானதாயிருக்கிறதா?
நான்
உனக்குள் நிகழந்துவிட…. "

இது எனக்கும் தோன்றும் கேள்வி அகிலன்,
னௌனம் கீறிய?????